சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2002 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், மேலும் சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் அருணாச்சலம், மாவட்ட துணை தலைவர் கிறிஸ்டின் ராஜ், காந்தி ராஜ், மாவட்ட பொருளாளர் இருதய ராஜா, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.