நடைபெற்ற மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அம்பலமுக்கு, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தொழிலதிபர் சிவக்குமார், ஆர். எம் .எஸ். சரவணன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பார்வை குறைபாடு, செயல்திறன் குறைபாடு, கைகால் இயக்க குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு போன்ற குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை, உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூக்கு கண்ணாடி, செவி துளைக்கருவி, பராமரிப்பு உதவித்தொகை, இலவச அறுவை சிகிச்சை ஆகியவை வழங்கி கோரி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.