காதலித்து திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவருக்கும் இடையே முடிவெடுப்பதில் ஒற்றுமை நிலவுகிறது என்று மனம் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா.
கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களுக்கு பின் “டெடி” என்ற படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக, வெரைட்டி கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து ஆர்யா கூறும்பொழுது, “நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க எங்களால் முடிகிறது. பல விஷயங்களில் இருவரது எண்ண அலைவரிசையும் ஒன்றாகவே உள்ளது. இது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. அந்தவிதத்தில் நான் ரொம்ப லக்கி” என்று கூறியுள்ளார் .