Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“இது எளிதானது அல்ல!… ஆனால் மதிப்புமிக்கது ஆகும்!…. தெலுங்கில் பாடி அசத்தும் நடிகர் சிம்பு….!!!!!

டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள சிம்பு “இது எளிதானது அல்ல. எனினும் மதிப்புமிக்கது ஆகும்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் “தி வாரியர்” படத்தில் நடிகர் சிம்பு பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |