உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷியப்படைகள் பெரும்பான உக்ரைன் பகுதிகளை கைப்பற்றினர். அதில் 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த நாலு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷியா தன்னுடன் இனைப்பதற்கான விழா இன்று அதிபர் மாளிகையில் கோலாகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குட்டரெஸ் விடுதுள்ள எச்சரிக்கை பதிவில் இந்த ஆபத்தான தருணத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சாகசங்களை நிலைநிறுத்த பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிகோடிட்டு காட்ட வேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்துதல் அல்லது பலத்தை பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும் என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.