Categories
தேசிய செய்திகள்

இது ஒன்னு முதல் ரெய்டு இல்லை…. இப்போதும் எதுவுமே கிடைக்காது…. -அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மணீஷ் சிசோடியா வீட்டில் இது முதல் ரெய்டு அல்ல எனவும் சோதனையில் தற்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது எனவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர். மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலியில் பேசியதாவது “இது முதல் ரெய்டு அல்ல.

சென்ற 7 வருடங்களில் மணீஷ் சிசோடியா வீட்டில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அத்துடன் அவர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. மேலும் என் வீட்டிலும், சத்யேந்தர் ஜெயின் வீட்டிலும், கைலாஷ் கெலாட்டிடம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டன. இருந்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே தற்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இன்று மணீஷ் சிசோடியா உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால் சி.பி.ஐ அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. ஆகவே பல்வேறு தடைகள் இருக்கும். நியூயார்க் நாளிதழின் முதல் பக்கத்தில், தில்லியின் கல்விப்புரட்சியைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. சி.பி.ஐ  தன் வேலையைச் செய்கிறது. இதனால் பயப்படத் தேவையில்லை. சி.பி.ஐ-யை அதன் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களை தொந்தரவு செய்ய மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. ஆனால் வேலை ஒரு போதும் நிற்காது” என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |