நேற்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யட்டப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தாலும் பாஜகவினர் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட்.
குறிப்பாக தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கான பட்ஜெட். எப்போதுமில்லாத மிக தலைசிறந்த பட்ஜெட். வரலாற்றிலேயே இப்படி ஒரு பட்ஜெட் இருந்ததில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை மெட்ரோ 63 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் நலனுக்காக சென்னையில் மீன்பிடி துறைமுகம் வருவதற்கு இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. திமுக தலைவர் இந்த பட்ஜெட்டை போலி லாலிபாப் என்று சொன்னது குறித்த கேள்விக்கு அப்போதும் கூட திமுக ஒரு இனிப்பான பட்ஜெட் என்றுதான் சொல்லி இருக்கின்றார் என எல்.முருகன் தெரிவித்தார்.