Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது ஒரு குத்தமா….? வெஜ்க்கு பதில் நான் வெஜ் வழங்கிய ஊழியர்…. கொந்தளித்த வாலிபர்…. போலீசார் விசாரணை….!!!!

வாடிக்கையாளருக்கு உணவை மாற்றி வழங்கிய ஒட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஒட்டலுக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் அவர் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் உடனடியாக ஒட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனால் ஒட்டல் ஊழியர்களும், உரிமையாளரும் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனாலும் இது குறித்து ஆகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஒட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்  மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |