Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது ஒரு குற்றச்செயல்’…. ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த ‘மாநாடு’ இயக்குனர்….!!!

மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல தடைகளை தாண்டி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாநாடு மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு குற்றச்செயல். திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |