சர்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளி பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்து இருக்கின்றார்.
இந்த நிலையில் சர்தார் திரைப்படத்தில் சீமான் புகழ் மழை பொழிந்துள்ளார். அதாவது சர்தார் படத்தில் பேசப்படும் கருத்தை வலியுறுத்தி தான் பேசியதை குறிப்பிட்டுள்ளார் தண்ணீர் மிகப்பெரிய சந்தை பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை இந்த படத்தின் மூலம் தெரியவரும் படத்தின் உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது என சீமான் புகழ்ந்துள்ளார்.