Categories
உலக செய்திகள்

இது ஒரு துரதிருஷ்டவசமான செயல்…. இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசிய துருக்கி அதிபர்…. வெளியான தகவல்கள்….!!!!

துருக்கி அதிபர் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐ.நா. சபையில் பேசி வருகிறார்.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் பேசியதாவது. இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்று இறையாண்மையை நிலைநாட்டி உள்ளது.
ஆனால் இன்று வரை இரு நாடுகளும் பரஸ்பர அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. இது ஒரு துரதிருஷ்டவசமானது. மேலும் காஷ்மீரில் நிரந்தர அமைதி மற்றும் வளம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் துருக்கி  பாகிஸ்தானின் நெருக்கமான கூட்டாளியாக உள்ளார். இவர் அடிக்கடி ஐ.நா.வில் உலக தலைவர்கள் மத்தியில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறார்.

இவரின் இந்த பேச்சு இந்தியா, துருக்கி இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஐ.நா.வில் ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய  கருத்துக்கள் முற்றிலும் நிராகரிப்பதாக இந்தியா தெரிவித்தது. மேலும் வேறு  நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியது. ஆனால் கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்த பேசிய இவர் இந்தியா துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து  பேசினர்.

Categories

Tech |