Categories
கிரிக்கெட் வணிக செய்திகள் விளையாட்டு

இது கடைசி கிடையாது…. நிச்சயம் மீண்டும் வருவேன்…. தோனியின் உறுதியான முடிவு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

கேப்டன் தோனி அவர்கள் ஐபிஎல் தொடரில்    திரும்பவும் வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்  எம்எஸ் தோனி அவர்கள் இந்த 2020”- ஆம் ஆண்டு மட்டும் எனது கடைசி ஐபிஎல் தொடர் கிடையாது அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்காக   நான் விளையாடுவேன்” என தெரிவித்திருக்கிறார். 13-வது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி விளையாடியது . இது வரை நடந்த ஐபில் தொடர்களில் ஒரு முறை கூட ப்ளே ஆஃப் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது கிடையாது.

ஆனால் முதல் முறையாக இந்த சீசனில் ப்ளே ஆஃப்  செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறுகின்றது. இதன் காரணமாக அந்த அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இளம் வீரர்களுக்கு அதிக  வாய்ப்பு அளிக்காதது மூத்த வீரர்களை அதிகமாக தேர்வு செய்வது இதில்  ரெய்னா, ஹர்பஜன் இல்லை  என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம்  பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும்  எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்வில் தோனி, கேஎல் ராகுல் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது வர்ணனையாளர்  நியூசிலாந்து முன்னாள் வீரர் டனி மோரிசன் தோனியிடம் அடுத்த முறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடுவீர்களா அல்லது இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா என கேட்டுள்ளார்.  அதற்கு தோனி அவர்கள் நிச்சயமாக கிடையாது சிஎஸ்கே அணியின் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என தெரிவித்திருக்கிறார்.

இதனால் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா இல்லை திடீரென ஓய்வு அறிவித்து விடுவாரா என்று கையை பிசக்கிக் கொண்டிருந்த ரசிகர்கள்களுக்கு  தோனியிடம் இருந்து பதில் கிடைத்துவிட்டன.  ஆகவே அடுத்த ஆண்டு ஏப்ரல் ,மே மாதங்களில் ஐபிஎல் தொடர்  நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்க்குள்  இந்தியாவில் கொரோனா  குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |