விதை விற்பனையாளர்களுக்கு ஆய்வு துணை இயக்குனர் விஜயா பயிற்சி அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் விஜயா, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், விதை ஆய்வாளர் ராஜி, சங்க நிர்வாகி பாலசுப்ரமணியன், சேது ராஜ், சுந்தர், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் விதை ஆய்வு துணை இயக்குனர் விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கட்டாயமாக பகுப்பாய்வு அறிக்கை வைத்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு நாள் மற்றும் விவசாயிகளின் கையெழுத்து போன்றவை பெற்றிருக்க வேண்டும் .
மேலும் விதை இருப்பு மற்றும் விற்பனை விவரத்தை ஒவ்வொரு மாத இறுதியில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் , விதைகளை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.