Categories
உலக செய்திகள்

“இது காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!!!!!

பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை பல பேருக்கு இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடிகிறது. இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றது. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்கிய விண்வெளி சுற்றுலா எனும் பெயரில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதற்கான பணிகளில்  விர்ஜின் காலக்டிக்  போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே செல்லக்கூடிய சுற்றுலாவாக விண்வெளி சுற்றுலா அமைகிறது. ஆனால் வரும் நாட்களில் அதற்கான கட்டணங்கள் மேலும் குறையலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் கல்விக்கூட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ராக்கெட்டுகள் வெளியிடும் கார்பன் துகள்கள் காலநிலை மாற்றத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த 2019 ஆம் வருடம் உலக அளவில் ஏவப்பட்ட 103 ராக்கெட்டுகளால் ஏற்பட்டதாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருக்கின்றனர். அதேநேரம் விண்வெளி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருங்கால திட்டங்களால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போதைக்கு ராக்கெட் ஏவுதல் மூலம் ஓசோன் படலத்தில் ஒரு சிறிய அளவுதான் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆனால் அது வரும் நாட்களில் விண்வெளி சுற்றுலா அதிகரிக்கும்போது ஓசோன் படலத்திற்கு நிச்சயம் பாதிப்புகள் இருக்கும் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்த உடனடியாக அதற்கான நடைமுறைகளை விண்வெளி சார்ந்த தொழில்துறை முன்னெடுக்க வேண்டும் என இந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |