Categories
தேசிய செய்திகள்

இது காவல் நிலையமா…? இல்ல மதுபானகடையா..? ஹாயாக அமர்ந்து மதுபானம் அருந்தும் கைதிகள்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த சில குற்றவாளிகள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராகுல் காலம் மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி நீரஜ் பாவனாவுடன் சேர்ந்து சிறைக்குள் சகல வசதியுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டும், செல்போன் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள அந்த காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க டெல்லி கமிஷனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |