ராணிப்பேட்டையில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் மீது ரோட்டிலிருக்கும் மின்கம்பி உரசியதால் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் லியோ குழந்தையோகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் செய்யாறிலிருந்து தனது மினி வேனில் வைக்கோல் படப்பை ஏற்றிக்கொண்டு ஏனாதவாடி வழியாக சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் மின் கம்பத்திலிருக்கும் மின்கம்பி தாழ்வாக இருந்துள்ளது.
இதனால் அவரது வைக்கோல் படைப்பின் மீது உரசியதால் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே வேனில் இருந்த லியோ குழந்தையோகாவும், ரமேஷ்சும் தப்பி ஓடிவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செய்யாறு தீயணைப்பு படையினர் அங்கிருந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே வேன் ஓட்டுனர் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.