Categories
தேசிய செய்திகள்

இது குளிர்காலம்…. சிலிண்டர் விலை உயர்வுக்கு.. அமைச்சரின் புது விளக்கம் ….!!

குளிர்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைப்பதை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.  மாதந்தோறும் மாற்றிய அமைக்கப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ( அதாவது 2019 டிசம்பர், 2020 ஜனவரி வரை )  2 மாதங்கள் விலை உயரவில்லை.

தேர்தல் முடிந்ததும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 147 ரூபாய் அளவிற்கு உயர்ந்து ,  மானிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 881 அளவிற்கு  விற்பனை ஆகி வருகின்றது.விலை உயர்வு குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , சர்வதேச சந்தையின் நிலவரம், எரிவாயு சிலிண்டருக்கான தேவையின் காரணமாக விலை உயர்ந்துள்ளது என்று கூறி இருந்த நிலையில் ,

சத்தீஸ்கர் மாநிலத்தின்  ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த போது , குளிர்காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதால்  விலை உயர்ந்துள்ளது . பயன்பாடு அதிகரிப்பால் எரிவாயுத் துறையில் நெருக்கடியில் இருக்கின்றது. மார்ச் மாதத்தில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |