மும்பையில் 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கேக். வசதிபடைத்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பிறந்தநாளை 550 செய்திகளை வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மும்பை காந்தி வாலி பகுதியைச் சேர்ந்த சூர்யா ரதுரி என்ற வாலிபர் 550 கேக்குகளை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதற்காக மொத்தம் மூன்று நீண்ட மேசைகளில் வைக்கப்பட்டிருந்த 550 கேக்களையும் இரண்டு கத்திகளை பயன்படுத்தி அவர் வெட்டியுள்ளார். இதற்காக அவர் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் அங்கு மீடியாக்களும் வந்து குவிந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.