பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் அணிந்து வீதிகளில் சென்றது அனைவராலும் தற்போது கவரப்பட்டு வருகின்றது.
பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர்களுள் ஒருவரான கலைஞர் ஆலியன் வெர்சூரன் (61) புருசல்ஸ் வீதிகளில் சென்ற போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு வித்தியாசமான மாஸ்க்கை அணிந்து கொண்டு சென்றுள்ளார். மேலும் அந்த கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்கினுள் பச்சை பசேலென்று இருந்த நறுமணமிக்க செடிகள் அனைவராலும் கவரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அந்த முதியவர் அணிந்திருக்கும் மாஸ் தூய்மையான காற்றை கொடுப்பத்தோடு, கொரோனாவாலிருந்து பாதுகாக்க உதவுவதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த முதியவர் துனிசியாவில் பணியாற்றியபோது அவர் பசுமையான சோலைகளால் கவரப்பட்டதால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த ஐடியாவை யோசித்து தற்போது இதுபோன்ற ஒரு மாஸ்க்கை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நறுமண செடிகளால் ஆன அந்த மாஸ்க் அவரது மூச்சு காற்றை சுத்திகரித்து தூய்மையான காற்றை வழங்குவதாகவும், அவர் ஆஸ்த்மா நோயாளி என்பதால் முககவசம் அணிவதில் சிரமப்பட்டு வந்த நிலையில் இந்த கண்ணாடி மாஸ்க்கிற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.