பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பகுதியில் முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி துறையில் தைரியமான நீதிபதி என்று பலரால் போற்றப்படுபவர். ஏனென்றால் இவர் ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை வழங்கியவர்.
இதனையடுத்து இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாகிஸ்தானின் முதல் மந்திரி மிர் அப்துல் குதூஸ் கூறியதாவது. நீதிபதியின் மறைவு எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது தீவிரவாதிகளின் கோழைத்தனமான நடவடிக்கை. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்த ஆண்டு அதிக அளவில் பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.