பெட்ரோல் பங்க்கில் கார் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேசில் நாட்டில் சியாரா என்ற பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் ஃபோக்ஸ்வேகன் கார் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த காருக்கு பெட்ரோல் பங்க்கில் உள்ள ஊழியர் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் திடீரென்று வெடித்து சின்னாபின்னமாக சிதறியது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரும் பெட்ரோல் பங்க் ஊழியரும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதனை தொடர்த்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், காரில் சட்டத்திற்கு புறம்பாக கேஸ் டேங்க் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.