Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது சட்டவிரோத செயல்…. போலீசை கண்டதும் தப்பியோட்டம்…. வளைத்து பிடித்த அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பஜார் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து டிராக்டரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மணலை அங்கேயே கொட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால் போலீசார் 2 பேரையும் வளைத்து பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராமு(40), ராம்(45) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |