இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சிறப்பான மாற்றங்களை கொண்டு வரும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
2021- 2022 மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட் கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டு வேலை வாய்ப்புகளை அளிக்கும் படி உள்ளதாகவும், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.