உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் 2-ஆம் உலகப் போரின்போது இறந்த தனது தம்பியை சுமந்தபடி மயானத்தில் வரிசையில் நின்ற ஒரு சிறுவனுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது தனது தம்பியை சுமந்து கொண்டு சென்ற சிறுவனிடம் சுமையை கொடு என ஊழியர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு “இது சுமையல்ல என் தம்பி” என அந்த சிறுவன் சொன்னதாக இந்த புகைப்படத்தை எடுத்தவர் பதிவு செய்துள்ளார். போரின் கொடுமை, ஜப்பானியர்களின் பெருமை என பல காரணங்களுக்காக அடிக்கடி பகிரப்படும் இந்த புகைப்படம் இப்போது உக்ரைன் போர்ச்சூழலை ஒட்டி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.