Categories
தேசிய செய்திகள்

இது சும்மா டிரெய்லர் தான்… தனியார்மயமாகும் 4 வங்கிகள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கவதற்கான பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசு பட்ஜெட் அறிவித்தபடி, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார்மயமாக்குவதற்கு முதற்கட்டமான 4 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவைதான் அந்த நான்கு வங்கிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த நான்கு வங்கிகள் மட்டுமே தனியார் மயமாக்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |