பாகிஸ்தானில் ஒமிக்ரானால் கொரோனா 5-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக அரசு சுமார் 55,000 சுகாதாரப் பணியாளர்களை கொண்ட பிரத்தியேகமான குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அந்த குழு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாவது தவணை தடுப்பூசிகளையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று செலுத்தும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.