Categories
மாநில செய்திகள்

“இது டவுசர் இல்ல பாவாடை”…. இலவச சீருடை குறித்து பேசிய மாணவன்…. அதிர்ந்து போன அரங்கம்..!!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவன் உதயன், தான் பயிலும் பள்ளியில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், கழிவறையில் போதுமான தண்ணீர் வசதி இல்லை என்று பகிரங்கமாக பேசினான். அது மட்டுமில்லாமல் அரசு அளித்துள்ள இலவச சீருடை டவுசரில் உள்ள நூல் பிரிந்து பாவாடை போல் ஆகிவிட்டது. இனியாவது சீருடை தரமான நூலில் தைத்து தர அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கூறி ஒட்டுமொத்த அரங்கே அதிர செய்தார்.

அதனை தொடர்ந்து கூட்டத்தின் நிறைவில் கல்வி கொள்கை உயர்நிலை குழுத் தலைவரை சந்தித்து எனது கோரிக்கை என்பது ஒட்டுமொத்த மாணவர்களை கோரிக்கை என மாணவன் உதயன் கூறவே அவனை உயர்கல்வி குழு தலைவர் வெகுவாக பாராட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணவன் உதயன் மற்றும் அவரது தாயார் கோகிலா வாணி, நாகமலை புதுக்கோட்டை திருப்பரங்குன்றம் ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் தரமான சீருடைகள் வழங்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |