கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் அதிருப்தியின் காரணமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அபிமானியான நடிகர் ஆனந்தராஜ், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால் முதலில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கும் போது சொல்லலாம். இப்போது சொல்லக்கூடாது.
பாஜகவைச் சேர்ந்த நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பின்னர் தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் பிரிவினை கோஷத்தை எழுப்பலாம். கொங்கு மண்டல மக்களை பற்றி அரசியல்வாதிகளை விட எனக்கு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார் மேலும் அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனவே அதிமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் திமுகவில் இணைய காத்திருக்கிறார்கள். நானும் திமுகவில் இணையலாமா? வேண்டாமா? என்று காலம் கனியும்போது நல்ல முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.