இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
போரிஸ் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் முன்னாள் இதழாளரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் விதிகளை மீறி தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.