Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கலெக்டரின் அதிரடி ஆய்வு… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு கலெக்டர் சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வியாபாரிகள் வியாபாரத்திற்காக மதியம் 12 மணிக்குப் பிறகும் கடைகளின் ஷட்டரை பாதி திறந்து வைத்து விற்பனை செய்ததை கலெக்டர் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து அந்த கடைகளுக்கு கலெக்டர் கிரண்குராலா பூட்டி சீல் வைத்தார். மேலும் அப்பகுதியில் விதியை மீறி திறந்து வைத்திருந்த டீ கடைகள் உட்பட 10 கடைகளையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது துணை காவலர் விஜயகுமார், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலெக்டருடன் இருந்தனர். இதனை அடுத்து தியாகதுர்கம் பகுதியிலும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஜவுளி கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த கடையின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் விதிகளை மீறி திறந்து வைத்திருந்த பூக்கடைகள், இனிப்பு கடைகள், ஜெராக்ஸ் கடைகள் போன்றவற்றை அடைத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதேபோல் சங்கராபுரம் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த மளிகை கடைகள், நகை கடைகள் மற்றும் டீக்கடை களுக்கு அபராதம்  விதித்துள்ளனர். இதனை அடுத்து சின்னசேலத்தில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு தாசில்தார் விஜயபிரபாகரன் தலைமையில் உள்ள அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |