துபாயில் நடைபெற்ற டிபிஎல்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக மாற்றுத்திறனாளி அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
துபாயில் DPL டி20 என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா,
துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதி சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி 24ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது எனவும், தமிழகத்தை கௌரவப்படுத்தும் வகையில் கோப்பையை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த போட்டிக்கு இந்தியாவிலிருந்து கொல்கத்தா, சென்னை, மும்பை, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய கேப்டன் சச்சின் சிவா, சென்னை அணி வரலாற்றிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் கோப்பையை அந்நிய மண்ணில் வென்று தமிழ்நாட்டை கௌரவப்படுத்தி இங்கு வந்திருக்கிறோம்.
இது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திற்கும் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக உதவி செய்தது கமல், சிவகார்த்திகேயன், விஜய் சங்கர் ஆகியோருக்கு எங்களோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.