Categories
மாநில செய்திகள்

இது தமிழக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி…. கி.வீரமணி மகிழ்ச்சி…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைத்த குழுவுக்கு எதிரான கரு.நாகராஜன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி. இன்னும் நாம் தாண்ட வேண்டிய தடைகளும், கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |