Categories
மாநில செய்திகள்

“இது தற்கொலை அல்ல கொலை” விஜய்க்கு டாக்டரின் உருக்கமான கடிதம்….!!

நடிகர் விஜய் மற்றும் சிம்புவுக்கு டாக்டர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

திரையரங்குகளில் வரும் பொங்களையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.  மேலும் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மஹில்ஸியில் உள்ளனர். இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் விஜய் சிம்பு மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கு அரவிந்த் சீனிவாசன் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடிவரும் நாங்கள் அனைவரும் சோர்ந்து போயுள்ளோம். ஆனால் இன்னும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் 100% இருக்கை என்பது பணத்துக்காக உயிர்களை பலி கொடுப்பது போலாகும். இது தற்கொலை முயற்சி அல்ல கொலை” என்று குறிப்பிட்டு இது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |