ட்வீட்டர் பங்குகளை வாங்க கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்து சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் திகழ்பவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்துள்ளார்.
பின்னர் கடந்த 11-ஆம் தேதி எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கூறியுள்ளார். மேலும் டுவிட்டர் பங்குகளை வாங்குவதற்கான தொகை குறித்து நடந்த கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந் நிலையில் மஸ்க் மீண்டும் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வந்திருக்கிறார். இதற்காக அவர் கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்து சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை அவர் இறுதியாக செலுத்தி டுவிட்டர் பங்குகளை வாங்க தயாராக இருப்பதாகவும் இந்த தொகையும் மறுக்கப்பட்டால் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மஸ்கின் கோரிக்கையிக்கு டுவிட்டர் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. இது பற்றி டுவிட்டர் நிறுவனம் தரப்பில், “டுவிட்டர் இயக்குநர்கள் குழு, நிறுவனம் மற்றும் அதன் அனைத்து பங்குதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு எலான் மஸ்கின் கோரிக்கையை மதிப்பீடு செய்யும் ,” என கூறியுள்ளது.