இந்தியாவில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அன்று நட்பை வெளிப்படுத்தும் விதமாக பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டனர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ட்விட்டர்வாசி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண்ணை 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றிவளைத்து கட்டிபிடித்து கொஞ்சுகிறது.
அந்த பெண் போதும் போதும் என்று சொல்லிய போதும், அந்த நாய்கள் மீண்டும் அந்த பெண்ணை கொஞ்சி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த பெண் அந்த நாய்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
I saw so many videos of #FriendshipDay, this one from @joedelhi takes the cake!
https://t.co/gKwswx7ieC— Harsh Goenka (@hvgoenka) August 7, 2022