Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தான் காரணமா”…. பிரபல நடிகருடன் இதுவரை நடிக்காத நயன்தாரா…. என்னவா இருக்கும்?…. நீங்களே பாருங்க….!!!

பிரபல நடிகை நயன்தாரா கமலுடன் நடிக்காததற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் கொடுத்தன. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற புகழ் நயன்தாராவை தான் சேரும். அதோடு கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் சோலோ கதாநாயகியாக நடித்து கேரியரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார் நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், சூர்யா, ஆர்யா, ஜீவா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஆனால் உலக நாயகன் கமலஹாசனுடன் மட்டும் இதுவரை நடித்ததே இல்லை. நயன்தாராவுடன் சமகாலத்தில் அறிமுகமான அசின், த்ரிஷா போன்ற நாயகிகள் நடிகர் கமலுடன் நடித்துள்ளனர். ஆனால் நயன்தாரா மட்டும் அவருடன் நடிக்காததிற்கு என்ன காரணம் என்று ரசிகர்களுக்கு குழப்பமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து கோலிவுட் வட்டாரத்தில் கமலுடன் நடிக்கும் நாயகிகள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வாய்ப்புகளை இழந்து விடுவார்கள் என்ற பேச்சு பேசப்பட்டு வருகிறது.  ஒரு வேளை இதனால் தான் அவருடன் நடிக்காததற்கு காரணமாக இருக்குமோ என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தான் அவர் நடிக்காமல் இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |