Categories
மாநில செய்திகள்

இது தான் திமுகவின் கொள்கையாக உள்ளது…. உதயநிதி எம்.எல்.ஏ பேச்சு…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கையாக இருக்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராக இருக்கின்ற மாணவர் உட்பட அனைத்து மாணவர்களும் பாதிக்காத அளவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Categories

Tech |