தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓபிஎஸ், தனபால், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அரசியல் பண்பாட்டிலும் நடவடிக்கைகளிலும், கட்சி வேறுபாடுக்கு அப்பாற்பட்டு கலந்து ஆலோசித்து தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்களை இது சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.