Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இது தான் முக்கியமான சோதனைச்சாவடி… ஒரு வாகனத்தையும் விடாதீங்க… அதிரடி காட்டும் பறக்கும் படை..!!

மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடமான கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் கொள்ளிடம் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் இந்த சோதனைச் சாவடியை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் ஆகிய பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கியமான சோதனை சாவடியாக கொள்ளிடம் சோதனைச்சாவடி இருப்பதால் தற்போது கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கொள்ளிடம் சோதனைச் சாவடிக்கு உடனுக்குடன் வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை இந்த சோதனை சாவடி வழியாக கொண்டு செல்லப்படுகிறதா என்று கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |