இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்கிறார்கள். அதில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் உணவு கூட ஆன்லைன் மூலமாக தான் வாங்குகிறார்கள். வெளியே சென்று வாங்குவதற்கு சிரமப்பட்டு வீட்டில் இருந்தவாறு அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். அதன்படி 2020ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் பிரியாணியும் முதலிடத்தை பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு நொடிக்கும், ஒரு வாடிக்கையாளர் பிரியாணியை ஆர்டர் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் இடம்பெற்றுள்ளது. இவர் குறிப்பாக பிரியாணி முதல் இடத்தைப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.