கிராம்பு ஒரு நறுமணப் பொருளாகவும், மருத்துவத்திற்கு சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிராம்பை சமையலில் உணவை சுவை உண்டாக்குவதற்கும், பிரியாணியிலும் சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள் செய்வதற்கும், சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இந்த கிராம்பை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கிராம்பு செரிமான பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் குமட்டலையும் தடுக்கிறது.
இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் அதிகமாக பங்குவகிக்கிறது.
செரிமான பிரச்சனையை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வாயில் போட்டு மென்று வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கடுமையான பல் வலி உள்ளவர்கள் கிராம்பை பல் வலி உள்ள இடத்தில் வைப்பதன் மூலம் பல் வலியில் இருந்து விடுபடலாம்.
தினமும் இரண்டு கிராம்பை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
தலைவலி இருந்தால் தலைவலி உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.
வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் அதற்கு தினமும் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அளிக்கப்படுகின்றன.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.