உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என நினைத்துப் பாருங்கள். மேலும் தேர்தல் முறையில் உள்ள நம்பகத்தன்மையை இது சீர்குலைத்து விடும். முதலில் தேர்தல் கமிஷன் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பான எதிர்கட்சிகளின் அச்சத்தை போக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.