கேஜிஎஃப்2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் யாஷ் பேசியது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப். இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கேஜிஎப்2 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை பிரசாந்த் நில் இயக்க யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ரிலீசை ஒத்திவைத்தனர் படக்குழு.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் கேஜிஎப்2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தபோது யாஷ் பேசியுள்ளதாவது, “இது தேர்தல் கிடையாது, சினிமா. கொண்டாடவேண்டும். விஜய் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உள்ளது. கண்டிப்பாக நான் பீஸ்ட் படம் பார்ப்பேன். விஜய் ரசிகர்களும் கேஜிஎப்2 பார்ப்பாங்கன்னு தெரியும்” என தெரிவித்திருக்கின்றார். இவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.