உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார்.
மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் பேசினார். அதில், “மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த நாட்டிற்குமே எதிரானது’ என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “விவசாயிகள் சமூகத்தில் எளியோராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு உற்ற நண்பனாக எப்போதும் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.