Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது நடக்காது”…. OPS திடீர் அறிக்கை… ADMKவில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியை இரண்டாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த பொது குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி சட்டப்படி கூட்டம் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இன்றைய கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப் பட்டால் அது அதிமுகவையும் தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |