ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ரஷ்யா எந்நேரமும் படை எடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இந்த முக்கிய சந்திப்பின் போது ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் ரஷ்யாவுக்கு பிளிங்கனின் இந்த பயணமானது எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிங்கன் உக்ரைன் அதிபருடனான ஆலோசனைக்கு பிறகு பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து உக்ரைனின் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது.