சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணன் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கிறார். ஜேடி மற்றும் ஜெர்ரி போன்றோர் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர்.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ ஷங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.