செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தந்தை பெரியார் பயிர் செய்த சுயமரியாதை திருத்தலமாம் தமிழ்நாட்டில், அறிஞர் அண்ணா நட்டு வளர்த்த நந்தவனமாம் தமிழ்நாட்டில், டாக்டர் கலைஞர் அவர்களின் அசைக்க முடியாத ஹாஸ்பேட்டஸ் கோட்டையாம் தமிழ்நாட்டில், உடலுக்கு உயிர் காவல், கடலுக்கு கரை காவல், கண்ணுக்கு இமை காவல், கன்னி தமிழகத்திற்கு ஸ்டாலின் காவல் என்று நாடு நம்பி கொண்டிருக்கின்ற வேலையில், அதை நடைமுறைப்படுத்தி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஊனப்படுத்துவதற்காக இன்றைக்கு சனாதன சக்திகள் சல்லடம் கட்டிக்கொண்டு தமிழ்நாட்டை தங்கள் வேட்டை காடாகி விடலாம் என்று கருதுகிறார்கள்.
அப்படி கருதுகின்றவர்களின் கனவில் கல்லறியவும், எங்களை நம்பி இந்த இயக்கத்தில் எதையும் எதிர்பார்க்காமல் கடமையாற்றக்கூடிய தம்பிமார்களுக்கு தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தினுடைய லட்சியங்களை அவர்களுக்கு பயிற்சிவிக்கவும், 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்துவதற்கு என் உயிர் தம்பி, கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இன்றைக்கு கும்பிடிப்பூண்டி தொகுதியில் மாவட்ட கழகத்தின் செயலாளர் கோவிந்தராஜன் அவர்களின் தலைமையில், இளைஞரணி செயலாளர் தம்பி உதய சூரியன் முயற்சியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற பயிற்சி பாசறையில், ஆபத்துகளையும் – அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டி நான் உரையாற்றியதற்கு பிறகு, மாணவர்கள் மத்தியில் ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை போல அண்ணன் திருச்சி சிவாவும் இன்றைக்கு வகுப்பு எடுத்திருக்கின்றோம்.
இந்த பயிற்சி பாசறை தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இளைஞர்களை உருவாக்கும். பாசிச சக்திகளுக்கு பாடை கட்டுகின்ற பெரும் போரில் இந்த ஒரு லட்சம் இளைஞர்களை நாங்கள் களத்துக்கு இறக்குவோம் என தெரிவித்தார். பாஜக மோடியின் சாதனை என நடத்தும் பொதுக்கூட்டங்களில் அதிகமான மக்கள் கூட்டம் கூடுவது ஆளும் திமுகவை அதிர வைத்ததை தொடர்ந்து, தற்போது திமுகவும் 1 லட்சம் இளஞர்களுக்கு திராவிட கொள்கையை பயிற்றுவித்து களம் இறக்குவது பிஜேபியை விழ்த்துவதற்காக என திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர்.