கேரளாவிற்கு தொடர்பில்லாத விவகாரங்களில் மாநில அரசு தலையிட வேண்டாம் என மத்திய அமைச்சர் திரு.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுமதி வழங்கும்படி, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரளாவின் கொரோனா இறப்பு விகிதம் நாட்டின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்ட வேண்டுமே தவிர, மற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறினார்.