ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் சிவப்பு எறும்புடன் மிளகாய் வைத்து சட்னி அரைத்து சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு குணமடையும் என்று கூறியுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் சிவப்பு எறும்புடன் மிளகாய் வைத்து சட்னி அரைத்து உண்கின்றனர். இந்த சட்னியில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா நோயாளிகளை குணபடுத்துவதாகவும்,அதனால் அதனை நோயாளிகளுக்கு தரும்படியும் ஒடிசா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.